செய்திகள்
உத்தரகாண்ட்: பாகிரதி ஆற்றில் பஸ் கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி நோக்கி சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து கங்கோத்ரி நோக்கி ஒரு பஸ் புறப்பட்டுச் சென்றது. சர்தாம் யாத்திரைக்காக சென்ற 29 பக்தர்கள் அதில் பயணம் செய்தனர். இந்த பஸ் பாகிரதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இரவு நிலவரப்படி 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பஸ்சில் பயணம் செய்த அனைவரும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.