செய்திகள்

பஞ்சாபில் நிலப் பிரச்சினையில் 9 பெண்கள் மீது ஆசிட் வீச்சு

Published On 2016-12-26 15:53 GMT   |   Update On 2016-12-26 15:54 GMT
பஞ்சாப் மாநிலத்தில் நிலப் பிரச்சினை காரணமாக இரண்டு பெண்கள் கும்பலுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் 9 பேர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள கிராமம் புய். இந்த கிராமத்தில் பஞ்சாயத்திற்கு சொந்தமான நிலத்திற்கு இரு பிரிவினரிடையே மோதல் இருந்தது.

இந்நிலையில் கிராம பஞ்சாயத்து தலைவர் வினோத் சேகல் தனது மனைவி ரீனா சேகல் மற்றும் சில பெண்களுடன் சேர்ந்து அந்த நிலத்தில் சமூக மையம் கட்டுவதற்கான வேலைகளை தொடங்குவதற்காக சென்றனர். அப்போது மற்றொரு பெண்கள் கும்பல் தகராறில் ஈடுபட்டது. திடீரென ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் இரண்டு கும்பலைச் சேர்ந்த 9 பெண்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதிக அளவில் காயம் அடைந்த ரீனா சேகல் ஜலந்தரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

Similar News