செய்திகள்

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு

Published On 2016-11-25 18:35 IST   |   Update On 2016-11-25 18:35:00 IST
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் நகரில் போலீசார் இன்று பிற்பகல் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள், போலீசாரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில்  பல ரவுண்டுகள் சுட்டதால் 2 போலீசார் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

போலீசார் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அங்குள்ள மார்கெட்டிலும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான போலீஸ்காரர்கள் தன்வீர் அகமது, ஜலாலுதீன் என அடையாளம் தெரியவந்துள்ளது. காமயடைந்த போலீஸ்காரர் சம்சுதீன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News