கதம்பம்

முத்து

மிகப்பெரிய முத்து

Published On 2022-08-01 07:43 GMT   |   Update On 2022-08-01 07:43 GMT
  • நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தபோது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை கண்டு மீனவர் மகிழ்ச்சி அடைந்தார்.
  • சுமார் 34 கிலோ எடையுள்ள முத்துவை ஆய்வு செய்தபோது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் உலகிலேயே மிகப்பெரிய முத்து இது தான் என தெரியவந்தது.

சாதாரணமாக முத்து எவ்வளவு பெரிதாக இருக்கும். ஆனால் 34 கிலோ எடையுள்ள முத்தைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பல்வான் என்ற தீவில் மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, கடலில் புயல் வீசத்தொடங்கியபோது பாதுகாப்பிற்கு நங்கூரத்தை வீசியுள்ளார். ஆனால், அந்த நங்கூரம் பாறை ஒன்றில் சிக்கியுள்ளது.

நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தபோது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும், அந்த முத்துவின் மதிப்பு பற்றி அறியாத அவர் அதனை ஒரு ராசிக்கல்லாக வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.

ஒரு மாதம் இரண்டு மாதம் அல்ல, 10 ஆண்டுகளுக்கும் அந்த அரிய முத்துவின் மதிப்பு தெரியாமல் அதனை வீட்டிலேயே வைத்துள்ளார்.

இந்நிலையில், அவர் வசித்து வந்த மரத்தால் செய்யப்பட்ட வீடு திடீரென தீவிபத்திற்கு உள்ளானதும் அந்த முத்துவை எடுத்துக்கொண்டு மற்றொரு வீட்டிற்கு குடி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, அப்பகுதியில் வசித்து வந்த சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் எதிர்பாராதவிதமாக இந்த முத்துவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து விலையில்லா கற்கள் பற்றி ஆய்வு செய்து வரும் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 34 கிலோ எடையுள்ள அந்த முத்துவை ஆய்வு செய்தபோது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் உலகிலேயே மிகப்பெரிய முத்து இது தான் என தெரியவந்தது.

இதன் இப்போதைய மதிப்பு 76 மில்லியன் பவுண்ட்(ரூ.672 கோடி) என தெரியவந்துள்ளது.

கடந்த 1934ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 6.4 கிலோ எடையுள்ள 'அல்லா' என்ற பெயருடைய முத்து தான் உலகின் பெரிய முத்து என பெயர் பெற்று இருந்தது. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டு முத்து அந்த பெயரை முறியடித்து உள்ளது.

- அண்ணாமலை சுகுமாரன்

Tags:    

Similar News

நாத்தனார்
அருமருந்து