உண்மை எது

உண்மை எது: லிபியா வெள்ள செய்தி வீடியோ உண்மையா?

Published On 2023-09-19 13:00 GMT   |   Update On 2023-09-19 13:00 GMT
  • டேனியல் புயல் காரணமாக அணை உடைந்து வெள்ளம் நகருக்குள் புகுந்தது
  • 2015ல் சவுதி அரேபியாவில் திஹாமா கஹ்டான் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது

வட ஆப்பிரிக்காவில் மத்திய தரைகடல் பகுதியில் உள்ள நாடு லிபியா. இந்நாட்டில் செப்டம்பர் 10 அன்று டேனியல் எனும் புயல் தாக்கியதில் அங்குள்ள முக்கிய அணைகள் உடைந்தது. இதன் காரணமாக அந்நாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் லிபியாவின் வெள்ளப்பெருக்கு குறித்தும் உயிர்சேதம் குறித்தும் ஒரு குறுஞ்செய்தியும் உடன் பதிவிடப்பட்டிருந்தது.

ஆய்வில், இந்த வீடியோ தவறானது என தெரிய வந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ, 2015ல் சவுதி அரேபியாவில் திஹாமா கஹ்டான் பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கின் போது எடுக்கப்பட்டது. இதனை லிபியா வெள்ள சேதத்துடன் இணைத்து செய்தியை திரித்து வெளியிட்டுள்ளனர்.

இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags:    

Similar News