செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட 3 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி

வாணியம்பாடியில் பறக்கும்படை சோதனையில் 3 கிலோ நகை பறிமுதல்

Published On 2019-07-12 07:30 GMT   |   Update On 2019-07-12 07:30 GMT
வாணியம்பாடியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 3 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

வாணியம்பாடி:

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி, திருப்பத்தூர் சாலையில் செட்டியப்பனூர் கூட்ரோட்டில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

அப்போது வாணியம்பாடி ஆம்பூர்பேட்டையை சேர்ந்த நகை கடை அதிபர் சீனிவாசன் என்பவர் காரில் வந்தார். காரை மடக்கி பறக்கும் படை சோதனையிட்டனர். அதில் 3 கிலோ 30 மில்லி கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருந்தன. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை.

நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமியிடம் நகைகளை ஒப்படைத்தனர். அவர் நகைகள் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் நகைகள் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News