உள்ளூர் செய்திகள்

இலவச வீட்டு மனை கேட்டு பெண்கள் மனு

Published On 2023-01-31 13:19 IST   |   Update On 2023-01-31 13:19:00 IST
  • எலந்த குட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெப்படை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம்.
  • எங்களுக்கு வெப்படை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் உள்ள வெப்படை பகுதியை சேர்ந்த பெண்கள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குமாரபாளையம் தாலுகா எலந்த குட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெப்படை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். நாங்கள் அனைவரும் கூலி தொழில் செய்து வறுமைக் கோட்டிற்கு கீழ் வசித்து வருகிறோம்.

சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில் வசித்து வரும் நாங்கள் மாத வாடகை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு வெப்படை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News