உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2023-05-23 09:43 GMT   |   Update On 2023-05-23 09:43 GMT
  • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
  • இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளாக நேற்றும் பல பகுதிகளில் மழை பெய்தது.

குறிப்பாக எடப்பாடி, சங்ககிரி, கரிய கோவில், கெங்கவல்லி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதிகபட்சமாக எடப்பாடியில் 22 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சங்ககிரி- 21, கரியக்கோவில்-12, கொங்கவல்லி -10, தம்மம்பட்டி-6, பெத்தநாயக்கன்பாளையம் -7, சேலம் -3, ஆத்தூர் -2.4, ஏற்காடு -1.6 என மாவட்டம் முழுவதும் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் சேலம் மாநகரில் பல்வேறு சாலைகள் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன.

Tags:    

Similar News