உள்ளூர் செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2022-11-28 07:53 GMT   |   Update On 2022-11-28 07:53 GMT
  • சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
  • அதிகபட்சமாக ஆத்தூரில் 28.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழையால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.

சேலம்:

வடகிழக்கு பருவ மழையொட்டி சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வீர கனூர், ஆத்தூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

வெயில் வாட்டியது

இந்த நிலையில் நேற்று காலையில் வெயில்

வாட்டி வதைத்த நிலையில்,

மாலையில் வானம் மேக

மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக ஆத்தூர், கெங்க

வல்லி, சங்ககிரி, தலைவா சல், வீரகனூர், கரிய கோவில் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மழை நீருடன் சாக்கடைநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக ஆத்தூரில் 28.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழையால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.

சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆத்தூர்-28.6 மி.மீ, கெங்கவல்லி- 22, சங்ககிரி - 20, தலைவாசல் - 17, சேலம் - 7.1, வீரகனூர் - 7, கரிய கோவில் - 4 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 105.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ராசிபுரம், புதுச்சத்திரம் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதே போல எருமைப்பட்டி, பரமத்தி வேலூர், நாமக்கல் நகர பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்ச மாக ராசிபுரத்தில் 19.3

மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. புதுச்சத்திரம்-10, பரமத்தி-3, நாமக்கல்-1.5, எருமப்பட்டி-2 என மாவட்டம் முழுவதும் 35.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

32 ஏரிகள் நிரம்பின

நாமக்கல் மாவட்டத்தில் 32 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 8 ஏரிகள் 75 சதவீதமும், 4 ஏரிகள் 50 சதவீதமும், 6 ஏரிகள் 25 சதவீதமும், 7 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. 22 ஏரிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. அந்த ஏரிகளிலும் தண்ணீர் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News