உள்ளூர் செய்திகள்

விவேகானந்தர் பிறந்த நாள் விழா

Published On 2023-01-14 14:43 IST   |   Update On 2023-01-14 14:43:00 IST
  • திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • காவிப்படை சொந்தங்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

தருமபுரி,

தருமபுரி வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி தேசிய இளைஞர் தினம் ஒன்றிய தலைவர் நாகராஜ் தலைமையில் கமலம் இன்டர்நேஷனல் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் பெரியாம்பட்டியில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது .இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் தெய்வமணி, இளைஞர் அணி தலைவர் மௌனகுரு மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சக்திவேல் ,இளைஞர் அணி விக்னேஷ் ஓ .பி. சி. அணி ஒன்றிய துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய இளைஞரணி, செயற்குழு உறுப்பினர்கள் அன்பு மற்றும் அருள், கிளை தலைவர்கள் சபரி, ஜீவானந்தம், செந்தில் வேல், அருள், ராதாகிருஷ்ணன், எம்..ஜி.ஆர். சின்னதுரை மற்றும் காவிப்படை சொந்தங்கள் திருவிழா கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News