உள்ளூர் செய்திகள்

பயிலரங்கத்தில் பங்கேற்ற பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி, துறைத்தலைவர் பிரியா ஆகியோரை படத்தில் காணலாம்.

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிலரங்கம்

Published On 2022-12-10 07:03 GMT   |   Update On 2022-12-10 07:03 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
  • இந்த பயிலரங்கில் 140 பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் உள்தர உத்தரவாத அமைப்பின் சார்பில் சிறந்த கற்பித்த லுக்கான பயிலரங்கம் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமையு தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "மாணவர்களுக்கு பிடித்த வகையில் கற்பிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு நனவு மனம், நனவிலி மனம் ஆகிய 2 வகையான மனநிலை உள்ளது. எதிர்மறையாக பேசக்கூடிய வார்த்தைகள் அவர்களது நனவிலி மனதில் பதிவாகி சிந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே மாணவர்களிடம் பேசும் போது நேர்மறையான வார்த்தைகளை பேச வேண்டும். வகுப்பில் சுற்றுச்சூழல் சார்ந்த நடப்பியல் நிகழ்வு களை சான்று காட்டி கற்பிக்க வேண்டும். பாடத்தைத் திணிக்காமல் அவர்களாகவே விரும்பிப் படிக்கும் அளவுக்கு கற்பிக்க வேண்டும். கற்பித்தல் ஒரு கலை ஆகும். வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கி ணைப்பாளரும், கணினி அறிவியல் துறைத் தலை வருமான பிரியா வரவேற்றார்.

உயிரித்தொழில் நுட்ப வியல் மற்றும் தாவரவியல் துறைகளின் தலைவர் சுஜாதா நன்றி கூறினார். இந்த பயிலரங்கில் 140 பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

Similar News