உள்ளூர் செய்திகள்

கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 

குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்

Published On 2023-04-23 08:50 GMT   |   Update On 2023-04-23 08:50 GMT
  • பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
  • மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

விருதுநகர்

பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் விருதுநகர் மாவட்டம் மேலஆமத்தூர், தாயில்பட்டி மற்றும் மேட்ட மலையில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நடந்தது.

194-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க உரிய விசாரணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவிப்பதற்காக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின்படி தமிழக அரசு ஒரு ஆலோசனை குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தது.

மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) செயலாளராகவும் கொண்ட இந்த குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் மேல ஆமத்தூரில் அமைந்துள்ள ராஜரத்தினம் பயர் ஒர்க்ஸ் ஒர்க்ஸ் இன்டஸ்டீரீஸ், தாயில்பட்டியில் அமைந்துள்ள ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் மற்றும் மேட்டமலையில் அமைந்துள்ள சன்சைன் பயர் ஒர்க்சிலும் நடந்தது.

மேற்படி களப்பணியின் போது பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்களிடம் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது.

கருத்துக் கேட்பு கூட்ட த்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவர்-மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், செயலாளர் மற்றும் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) ஜெ.காளிதாஸ், குழு உறுப்பினர்களான சிவகாசி பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், எல்.பி.எப். தொழிற்சங்கம் மாடசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. சமுத்திரம், சி.ஐ.டியூ.தேவா, டி.ஐ.எப்.எம்.ஏ. கண்ணன், சன் சைன் பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

Tags:    

Similar News