உள்ளூர் செய்திகள்

ஆளுமைத்திறனின் அவசியம் குறித்த விரிவுரை

Published On 2023-03-16 09:16 GMT   |   Update On 2023-03-16 09:43 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆளுமைத்திறனின் அவசியம் குறித்த விளக்கப்பட்டது.
  • துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் (நிறுமச் செயலரியல்) துறை சார்பில் ஆளுமைத்திறனின் அவசியம் பற்றி விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மேலாண்மைத்துறை இணைப்பேராசிரியர் சந்திரபோஸ் பங்கேற்றார். அவர் பேசுகையில், மாணவர்கள் நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பு தங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும், சிறந்த ஆடை முறைகள் நேர்காணலின் போது மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது என்றும் கூறினார்.

நேர்காணல் அறைக்குச் செல்லும் முறை, நேர்காணலின்போது கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முறை, நேர்காணலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்.

துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் சூரியா நன்றி கூறினார். உதவிப்பேராசிரியை ஜாஸ்மின் பாஸ்டினா ஏற்பாடு செய்தார்.

Tags:    

Similar News