கோப்புபடம்
பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்
- 2 பேர் கைது
- வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு
வேலூர்:
வேலூர் ஆற்காடு சாலையில் தனியார் மருத்துவமனை அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு இளவரசன் என்பவர் வேலை செய்து வருகிறார்.
பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்
நேற்று 3 பேர் ஒரே பைக்கில் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர். அப்போது பெட்ரோல் பங்க் வளாகத்தில் தங்களது பைக்கை நிறுத்திவிட்டு செல்ல முயன்றனர். இதற்கு இளவரசன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பைக்கில் வந்த3 பேரும் இளவரசனை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்த இளவரசன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இருந்தாலும் 3 பேரும் அவரை தொடர்ந்து தாக்கினர். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2 பேர் கைது
இது குறித்து இளவரசன் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசனை தாக்கிய சைதாப்பேட்டையை சேர்ந்த கணபதி( வயது 26), அவரது சகோதரர் பார்த்தசாரதி (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.