உள்ளூர் செய்திகள்
வேலூர் நூலகத்தில் சிறுவர்களுக்கு கதை, பாடல் பயிற்சி
- கோடை முகாம் நடந்தது
- பரதநாட்டிய பயிற்சி பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது
வேலூர்:
வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி அருகே உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் செம்பருத்தி கலை இலக்கிய அமைப்பு சார்பில் கோடை முகாம் இன்று தொடங்கியது.
முகாமிற்கு மாவட்ட நூலக அலுவலர் பழனி தலைமை தாங்கினார்.
கண்காணிப்பாளர் சிவகுமார் மைய நூலகர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் வேலூரை சேர்ந்த 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நீதிமொழி என்பவர் நீதி போதனை கதைகள், பாடல்களை பாடுவது குறித்து பயிற்சி அளித்தார்.
நாளை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மாணவர்களுக்கு யோகா பயிற்சி பரதநாட்டிய பயிற்சி பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் தர்ஷினி வாசுகி தேவராஜ் கல்வி கவியரசு பானு ரேகா அரிமார்த்தன பாண்டியன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.