மரக்கன்றுகள் நடும் காட்சி
- வனத்துறை சார்பில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
- 200 மரக்கன்றுகள் நடப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் வனச்சரகத்தில் வனத்துறை சார்பில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திருமகள் ஆலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு தலைமை தாங்கினார். வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் கணேசன், நீலகண்டன், வனராஜ் சிவா, சுகந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வனவர் மாசிலாமணி வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், குடியாத்தம் நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வர் பொறுப்பு வாசுகி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
நகர்மன்ற உறுப்பினர் மனோஜ், ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன், நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.என்.விஜயகுமார் கலந்து கொண்டனர்.