கோப்புப்படம்
2 வீடுகளுக்குள் புகுந்த பாம்பு மீட்பு
- விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதாக புகார்
- தேவையற்ற பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்துக் கொள்ள வலியுறுத்தல்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த வெங்கனபாளையம் பகுதியில் மோகன் என்பவரது வீட்டில் சுமார் 7 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு புகுந்தது. அதேபோல் ஒடுகத்தூரில் தினேஷ் என்பவரது வீட்டில் சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு புகுந்தது.
இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் வீட்டில் புகுந்த பாம்புகளை பிடித்து அருகில் உள்ள காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்:-
தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.
இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகளில் தேவையற்ற பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டாம் உடனடியாக அகற்றிவிட்டு தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.