உள்ளூர் செய்திகள்
வீட்டின் கழிவறைக்குள் புகுந்த 4 அடி நீள பாம்பு மீட்பு
- வனச்சரக அலுவலர் பிடித்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன். இவரது வீட்டின் அருகே உள்ள கழிவறையில் நாகப் பாம்பு ஒன்று புகுந்தது.
பாம்பைப் பார்த்த சின்ன கண்ணன் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.
பின்னர் அங்கு விரைந்த வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வீரர்கள் 4 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பை பிடித்து பருவமலை காப்பு காட்டில் விட்டனர்.