உள்ளூர் செய்திகள்

பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம்

Published On 2023-06-30 15:44 IST   |   Update On 2023-06-30 15:44:00 IST
  • ரூ.19.60 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார், பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் முன்னிலை வகித்தார்.

பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் தீர்மானங்களை வாசித்தார்.

இதில் 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் கழிப்பிடங்கள் பழுது நீக்கம் பணி மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

மேலும் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள கழிப்பிடங்களை ரூ.5 லட்சத்தில் பழுது பார்த்தல், கிருஷ்ணசாமி நகரில் ரூ.3 லட்சத்தில் கழிப்பிடத்தை சீரமைத்தல், வேப்பங்கால் பகுதியில் ரூ.5 லட்சத்தில் கழிப்பிடம் அமைத்தல், ரூ.6.60 லட்சத்தில் ஈரக்கழிவு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News