வேலூர் சிறைச்சாலை கைதிகள் படிப்பதற்காக தலைவர்களின் வரலாற்று புத்தகங்களை வழங்கிய குடியாத்தம் நகர மன்ற தலைவர் சவுந்தர்ராஜன்.
வேலூர் சிறைச்சாலை கைதிகள் படிப்பதற்காக தலைவர்களின் வரலாற்று புத்தகம்
- குடியாத்தம் நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் வழங்கினார்
- போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்
குடியாத்தம்:
வேலூரில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாங்கி வேலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் படிப்பதற்கு வசதியாக புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை பெட்டியில் புத்தகங்களை போடுமாறு காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் வேலூர் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சிக்கு சென்று அங்கு புத்தக கண்காட்சியில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகிய தலைவர்களின் வரலாற்று புத்தகங்களையும், திராவிடத்தின் ஆட்சி என்னும் தலைப்புகளில் உள்ள புத்தகங்களையும் வழங்கினார்.