உள்ளூர் செய்திகள்

சோமேஸ்வரர் கோவில் வருஷாபிஷேக விழா

Published On 2023-05-31 09:29 GMT   |   Update On 2023-05-31 09:29 GMT
  • முதல்கால வேதிகார்ச்சனை, முதல்கால யாக பூஜையும், இரவு தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன.
  • அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம், மகாபிஷேகம் நடந்தன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பழையபேட்டை பார்வதி சமேத சோமேஸ்வரர் கோவில் வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், ருத்ர பாராயணம் மற்றும் ஹோமம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும், சாமிக்கு மகாதீபாரதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. மாலை விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், 108 கலச ஸ்தாபனம், 108 சங்கஸ்தாபனம், முதல்கால வேதிகார்ச்சனை, முதல்கால யாக பூஜையும், இரவு தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன.

நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜைகள், தீபாரதனையும், காலை 10.35 மணிக்கு சாமிக்கு 108 குடம் கலசாபிஷேகம், அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம், மகாபிஷேகம் நடந்தன. மதியம் 12.30 மணிக்கு மகாதீபாராதனை, இரவு சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News