உள்ளூர் செய்திகள்

மேலப்பாளையத்தில் கேக் வெட்டி காதலர் தினம் கொண்டாடிய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

மேலப்பாளையத்தில் கேக் வெட்டி, புறாக்களை பறக்க விட்டு காதலர் தினம் கொண்டாட்டம்

Published On 2023-02-14 15:15 IST   |   Update On 2023-02-14 15:15:00 IST
  • உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

நெல்லை:

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட காதல் தம்பதியினர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். கேக்கில் ஆதலால் காதல் செய்வீர் என எழுதப்பட்டிருந்தது. இதன் பின்னர் அவர்கள் எடுத்து வந்த ஜோடி புறாக்களை வானில் பறக்க விட்டும், இனிப்புகள் வழங்கியும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் சமத்துவம் பேசும் காதலர் தினத்தை வரவேற்போம் என கோஷம் எழுப்பினர்.

காதலர் தினத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் காதலர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புறாக்களை பறக்க விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News