உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட ராமக்கா ஏரி பகுதியில் 2.0 விழிப்புணர்வு-தூய்மை பணி

Published On 2022-10-29 15:00 IST   |   Update On 2022-10-29 15:00:00 IST
  • பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
  • அலுவலர்கள் பங்கேற்று தூய்மை இந்தியா திட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டதித்தில் மத்திய அரசின் இளையோர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு இளையோர் மையம் சார்பில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பில் ராமக்கா ஏரி பகுதியில் 2.0 இரண்டாம் கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தூய்மை பணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வரவேற்றார். நகர மன்ற தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் பிரேம் பரத்குமார் திட்டம் குறித்து விளக்கினார். வார்டு உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமாரன் முன்னிலை வகித்தனர். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பெரியார் யூனிவர்சிட்டி மாணவ,மாணவிகள் மற்றும் தொன்போஸ்கோ கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

ராமக்காள் ஏரி தருமபுரி நகராட்சி பகுதியில் இருப்பதால் அதை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் 2.0 நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருகிறது.

நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று தூய்மை இந்தியா திட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News