உள்ளூர் செய்திகள்
லாரியில் மண் கடத்திய டிரைவர் கைது
- மூன்று யூனிட் மண் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது.
- சீனிவாசன் (வயது 32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாக்கடை போலீசார் ராமியணப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரசின் அனுமதியின்றி மூன்று யூனிட் மண் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரியை ஓட்டிவந்த சீனிவாசன் (வயது 32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.