உள்ளூர் செய்திகள்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை அணில் தப்பி ஓட்டம்

Published On 2023-09-30 08:07 GMT   |   Update On 2023-09-30 08:07 GMT
  • திருச்சி ஏர்போர்ட்டில்கடத்தி வரப்பட்ட அரிய வகை அணில் தப்பி ஓட்டம்
  • வனத்துறையினர் தீவிர தேடும் பணி

கே.கே.நகர்,  

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து மலிந்தோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர் அப்போது பெண் பயணி ஒருவர் கொண்டு வந்த கைப்பையில் உயிருடன் நகரும் பொருள் இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அவரது கைப்பையை சோதனை செய்த போது, அதில் மலேசியாவில் இருந்து அரிய வகை அணில் இரண்டு எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அரிய வகை அணிலை கைப்பையில் எடுத்து வந்தது மலேசியாவை சேர்ந்த, விஜயலட்சுமி என்பது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் வருவதற்கு முன்பாக, அந்த அணில்கள் தப்பி ஒடின. அணிகளை பிடிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முயற்சித்த போது, ஒருவரின் கையை கடித்து குதறியது. இதனால் அவர் அலறி துடித்தார். காயம் பட்ட அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் விமான நிலையம் வந்து சேர்ந்த வனத்துறையினர் அணிலை தேடி அலைந்து வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் விமான நிலையத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்அங்குலமாக தேடி வருகின்றனர். தப்பி ஓடிய அணிலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News