துறையூர் அருகே புதிய ரேஷன் கடை-எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்
- துறையூர் அருகே புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது
- நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சி, ராஜபுரம் பகுதி மக்கள் தங்களது பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்து தருமாறு துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையின் படி அப்பகுதியில் புதிய ரேஷன் கடையை எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், துறையூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் மதுபாலன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், கிளைச் செயலாளர்கள் ராமராஜ், கோபி, மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, விவசாய அணி செல்லமுத்து, ஒன்றிய கவுன்சிலர் அசோகன், வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.