உள்ளூர் செய்திகள்

பெண் கடத்தலில் தட்டிக்கேட்ட மாமியாருக்கு அடி-உதை

Published On 2022-09-14 15:38 IST   |   Update On 2022-09-14 15:38:00 IST
  • பெண் கடத்தலில் தட்டிக்கேட்ட மாமியார் தாக்கப்பட்டார்.
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி:

திருச்சி லால்குடி ஆங்கரை மலையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அம்பிகா.

இவருக்கும் அதே பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அருண்குமார்(வயது 26) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அம்பிகாவை அருண்குமார் கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் அருண்குமார் நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இதை அறிந்த

அம்பிகாவின் மாமியார் ஜோதி (65) நேராக சென்று அருண்குமாரிடம் மருமகளை எங்கு மறைத்து வைத்திருக்கிறாய் என கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த அருண்குமார் ஜோதியை கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த ஜோதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து லால்குடி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News