உள்ளூர் செய்திகள்
ஒரே இரவில் 8 ஆடுகளை குதறிய வெறி நாய்கள்
- இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை எனவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர்.
திருச்சி
உப்பிலியபுரம் ஏரிக்காட்டைச் சேர்ந்தவர் வெள்ளையன். விவசாயி. தனக்கு சொந்த தோட்டத்தில் விவசாயத்துடன், ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார். நேற்றிரவு தோட்டத்திற்கு வந்த நாய்கள், அங்கிருந்த 8 ஆடுகளை கடித்துக் குதறியதால் அனைத்தும் இறந்து கிடந்தது கண்டு வெள்ளையன் அதிர்ச்சியடைந்தார். இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. வைரிசெட்டி ப்பாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகமுள்ளதாகவும், அவற்றை அப்புறப்படுத்த பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை எனவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர்.