உள்ளூர் செய்திகள்

சப்பரங்களுடன் பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.

சப்பரங்களுடன் நடைபயணம்

Published On 2022-09-05 10:09 GMT   |   Update On 2022-09-05 10:09 GMT
  • இருந்த நிலையிலும் அதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.
  • மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து நடை பயணமாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சாவூர்:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலக புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு தினமும் வருவர்.

இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. 8-ந் தேதி மாதாவின் பிறப்பு பெருவிழா நடைபெற உள்ளது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து நடை பயணமாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி கடந்த சில நாட்களாக திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தஞ்சை வழியாக வேளாங்கண்ணிக்கு நடை பயணமாக சென்று வருகின்றனர்.

சிறிய மற்றும் பெரிய அளவில் சப்பரங்களை இழுத்துக் கொண்டு பின்னால் மினி லாரியில் ஒலிபெருக்கியில் மாதாவின் பாடல்களை ஒலிக்க விட்டவாறு செல்கின்றனர்.

தஞ்சையில் மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக மாறி மாறி பருவநிலை காணப்படுகிறது.

இருந்த நிலையிலும் அதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். 

Tags:    

Similar News