உள்ளூர் செய்திகள்
அரூரில் சீல் வைக்கப்பட்ட கடை.
அரூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்
- கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்ட னர்.
- இதையடுத்து, அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா, அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசிர் பாத்திமா உத்தரவின் பேரில் அரூர் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி அரூரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்ட னர்.
அப்போது அரூர் பழையபேட்டை வர்ண தீர்த்தம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.
கடை உரிமையாளர்கள் மூன்று பேருக்கு தலா ரூபாய். 5 ஆயிரம் வீதம் ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது.
சோதனையின் போது காவல் உதவி ஆய்வாளர்கள் கெய்க்வாட், மனோகரன், சிவபெருமாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.