செய்யாறு கொடநகரில் புதிய ரேசன் கடை
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- பொதுமக்களுக்கு அன்னதானம்
செய்யாறு:
செய்யாறு டவுன், கொடநகர் 9-வது வார்டில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சத்தில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர்ஆ. மோகனவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குல்ஷார், கவுன்சிலர் ஞானமணி சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கொடநகர் பகுதியில் தி.மு.க. கொடியை ஏற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அப்பகுதியை சேர்ந்த பூப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், யூனியன் சேர்மன்கள் ராஜு, பாபு, நகர செயலாளர் கே.விஸ்வநாதன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சம்பத், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், சங்கர், திராவிட முருகன், நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அக்பர், சரஸ்வதி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.