உள்ளூர் செய்திகள்

துரியோதனன் பீமன் வேடம் அணிந்த நாடக நடிகர்கள் நடித்தனர்.

5 புத்தூர் கிராமத்தில் துரியோதனன் படுகளம்

Published On 2023-05-13 12:37 IST   |   Update On 2023-05-13 12:37:00 IST
  • மாலையில் தீமிதி விழா நடைபெற்றது
  • ஏராளமானோர் சாமி தரிசனம்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த 5 புத்தூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட துரியோதனன் சிலை முன்பு, பீமன், துரியோதனன் வேடமணிந்து நாடக நடிகர்கள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடத்தினர்.

இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வேடிக்கை பார்த்தனர். இந்த விழாவில் ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்து மகாபாரத சொற்பொழிவை கேட்டார். கோவில் சார்பில் விழாக்குழுவினர் பரசுராமன் உள்பட பலர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். மாலையில் கோவில் தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்தபடி கோவிலை வலம் வந்தனர்.

இரவில் முருகன் திருவிளையாடல் நாடகம் நடைபெற்றது. இன்று தருமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News