உள்ளூர் செய்திகள்

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழாவில் பங்கேற்றவர்கள்.

அவினாசியில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

Published On 2023-07-27 15:35 IST   |   Update On 2023-07-27 15:35:00 IST
  • சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் 90 வது குருபூஜை நிகழ்ச்சி நடந்தது.
  • 8 மணி அளவில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான்பெருமாள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது .

அவினாசி:

அவினாசியில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீகருணாம்பிகை உடனுறை அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் 90 வது குருபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில் கரூர் குமாரசாமி தேசிகர் தலைமையில்சுந்தரமூர்த்தி நாயனார் அருள செய்த ஏழாம் திருமுறை, தெய்வ சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணம் வரலாறு பற்றி முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக நேற்று காலை 5 மணி அளவில் செல்வ வினாயகர், பாதிரி மரத்தம்மன், சிவகாமி அம்பாள், சுப்பிரமணியர், 63 நாயன்மார்கள், பஞ்சலிங்கம், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. 8 மணி அளவில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான்பெருமாள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது .

இரவு 7 மணியளவில் யானை வாகனத்தில் சுந்தரரும், குதிரை வாகனத்தில் சேரமான் பெருமானும் திருக்கோவில் வளாகத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அவினாசி, திருப்பூர், திருமுருகன் பூண்டி, சேவூர், கருவலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News