உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டுகோள்

Published On 2022-09-08 06:02 GMT   |   Update On 2022-09-08 06:02 GMT
  • நேர்காணல் செய்வதற்கான கால அளவு 20-5-2022 ன் படி ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை ஆகும்.
  • 2508 ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ளனர்.

திருப்பூர் :

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்-குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் செய்வதற்கான கால அளவு 20-5-2022 ன் படி ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை ஆகும். திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் (சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் உட்பட) நாளது தேதி வரை 2508 ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ளனர். ஆண்டு நேர்காணல் புரிவதற்கான காலக்கெடு முடிவதற்கு குறைவான நாட்களே உள்ளதால் தங்களது ஓய்வூதியத்தை தொடர்ச்சியாக பெறுவதற்கு, நாளது தேதி வரை ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ள ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது மின்னணு வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின்னணு வாழ்நாள் சான்றினை ஜீவன் பிரமான் இணையதளம் வாயிலாக இந்திய தபால் துறை வங்கி, இ-சேவா மற்றும் பொது சேவைமையங்கள் (சேவை கட்டணம் உண்டு) மூலம் சமர்ப்பிக்கலாம். மேலும் கருவூலத்திற்கு நேரில் சென்றும் நேர்காணல் புரியலாம். மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க அளிக்க வேண்டிய விவரங்கள் : ஆதார் எண், பி.பி.ஓ.,எண், வங்கி கணக்கு எண் மற்றும்செல்போன் ஓ.டி.பி., அளிக்க வேண்டும் என கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News