உள்ளூர் செய்திகள்

அறுவடைக்கு தயாராக உள்ள கம்பு பயிர்கள்.

உடுமலை பகுதிகளில் அறுவடைக்கு தயாரான கம்பு பயிர்கள்

Published On 2023-07-18 07:09 GMT   |   Update On 2023-07-18 07:09 GMT
  • கோடை சீசனில் கம்மங்கூழ் தயாரிப்புக்காக கம்பு தானியத்தின் தேவை அதிகரிக்கும்.
  • கம்பு சாகுபடி செய்து கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.

உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதிகளில் மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி கம்பு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தானிய தேவைக்காகவும் கால்நடைகளின் உலர் தீவனத்திற்கும் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கு

றிப்பாக கோடை சீசனில் கம்மங்கூழ் தயாரிப்புக்காக கம்பு தானியத்தின் தேவை அதிகரிக்கும். எனவே இந்த சீசனை இலக்காக வைத்து பரவலாக வீரிய கம்பு சாகுபடி செய்து கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது. கோடைகாலத்தில் கம்புக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Tags:    

Similar News