உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

புதிர் விளையாட்டில் அசத்தும் 3 வயது குழந்தை

Published On 2022-07-19 11:05 IST   |   Update On 2022-07-19 11:05:00 IST
  • சாதனை புத்தகத்தில் இடம் பெற்று, பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
  • இன்னும் பல சாதனைகள் புரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

உடுமலை:

உடுமலை அடுத்த கொங்கலக்குறிச்சி பகுதியைச்சேர்ந்த தம்பதியர் கார்த்தி, ஹர்சா. இவர்களின் 3வயது மகள் தனு, மழலைப் பருவத்திலேயே பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகள் செய்து வருகிறார்.அவ்வகையில் புதிர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டும் தனு, குறித்த நேரத்தில் காண்பிக்கும் பொருட்களை பார்த்து அந்த பெயர்களை சரியாக சொல்கிறார்.மேலும் தேசிய சின்னங்கள், தலைவர்கள், உணவுப்பொருட்கள், வண்ணங்கள், ஆடைகள், உடலின் பாகங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற, 60 பொருட்களை கலைத்து வைத்தாலும் நாம் சொல்லும் பொருட்களை சரியான முறையில் எடுத்து, 17.15 நிமிடத்தில் அதனை புதிர் விளையாட்டு அட்டையில் அடுக்கி வைக்கிறார்.இவர் வெளிப்படுத்திய இந்த திறமை, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்று, பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.அவரது பெற்றோர் கூறுகையில், குழந்தையின் திறமையை ஊக்கப்படுத்தி வருகிறோம். தவிர, ஸ்லோகம் சொல்வதிலும் பயிற்சி பெறுகிறார். புதிர் விளையாட்டின் திறமை, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இன்னும் பல சாதனைகள் புரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றனர். 

Tags:    

Similar News