உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

இளம் ஏற்றுமதியாளர்களுக்கு பின்னலாடை தயாரிப்பு புதிய தொழில்நுட்ப கருத்தரங்கு - திருப்பூரில் 2-ந் தேதி நடக்கிறது

Published On 2023-10-29 10:02 GMT   |   Update On 2023-10-29 10:19 GMT
  • சாய் இன்வெர்ட் கன்சல்டன்சி நிறுவனர் வையுறு அமர்நாத் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
  • சென்னை அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரியின் ஜவுளி தொழில்நுட்ப நிறுவனராக பணியாற்றியவர்.

திருப்பூர்:

திருப்பூரில் இளம் ஏற்றுமதியாளர்கள் பின்னலாடை தொழில் துறையின் நுட்பங்களை அறியும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் காபி வித் எக்ஸ்பர்ட் என்ற கருத்தரங்கை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் எதிர்கால பின்னலாடை தயாரிப்பின் புதிய தொழில்நுட்பம் மற்றும் மேம்பாடு என்ற தலைப்பில் வருகிற 2-ந் தேதி மாலை 5 மணிக்கு அப்பாச்சி நகரில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் சக்திவேல் அரங்கில் நடக்கிறது.சாய் இன்வெர்ட் கன்சல்டன்சி நிறுவனர் வையுறு அமர்நாத் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜவுளி தொழிற்துறையில் நிபுணத்துவம் பெற்றவர். சென்னை அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரியின் ஜவுளி தொழில்நுட்ப நிறுவனராக பணியாற்றியவர். இந்த கருத்தரங்கில் இளம் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News