உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

ருத்ராவதி பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்

Update: 2022-09-29 06:59 GMT
  • கூட்டத்தில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குண்டடம்:

ருத்ராவதி பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் மீனா கவுரி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள், துணைத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற புது ருத்ராவதி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரனுக்கு பேரூராட்சி சார்பில் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ,அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News