உள்ளூர் செய்திகள்
சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறும் காட்சி. 

பள்ளபாளையத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2023-05-21 07:38 GMT   |   Update On 2023-05-21 07:38 GMT
  • பள்ளபாளையம் குளம் பாதுகாப்பு அமைப்பி ன் சார்பில் 10ஆயிரம் பனை விதைகளும், 5000 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட உள்ளது.
  • சாமளாபுரம் பொன்னுச்சாமி உள்பட பலர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மங்கலம்: 

திருப்பூர் மாவட்டம், சாமளா புரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் உள்ள சின்னகுளத்தின் குளக்கரையில் சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையம் குளம் பாதுகாப்பு அமைப்பி ன் சார்பில் 10ஆயிரம் பனை விதைகளும், 5000 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட உள்ளது .இதன் முதற்கட்டமாக பள்ளபாளை யம் சின்னகு ளத்தின் குளக்கரையில் பனைவிதைகள், மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டு சொட்டுநீர்பாசனம் அமைப்ப தற்கான பணிகள் நடைபெற்றது.இப்பணிகளை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையம் குளம் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி களான எஸ்.கே.எல்.மணி, என்.ராமசாமி, பள்ளபாளையம் கிருஷ்ணகுமார், திருப்பூர் மேற்கு ரோட்டரி முன்னாள் தலைவர் ரகுபதி, சாமளாபுரம் பொன்னுச்சாமி உள்பட பலர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News