உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

ஊரக வேலை திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம்

Published On 2023-01-01 10:39 IST   |   Update On 2023-01-01 10:39:00 IST
குறைதீர்ப்பாளரை தொடர்பு கொள்ள 8925811339 என்ற செல்போன் எண்ணையும்,ombudsmenpersontirupur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்தி கொள்ளலாம்.

திருப்பூர்:

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் குறைகளை தீர்ப்பதற்காக பிரேமலதா என்பவர் திருப்பூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்பு கொள்ள 8925811339 என்ற செல்போன் எண்ணையும், ombudsmenpersontirupur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பொதுமக்கள் மற்றும் மகாத்மாகாந்தி தேசியஊரக வேலைஉறுதித்திட்டத்தில் பணிபுரிபவர்கள் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News