தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத்துறைக்கு திருப்பூர் பெரம்பலூர் மாவட்ட குழு தலைவர்-உறுப்பினர்கள் நியமனம்

Published On 2023-02-03 10:16 GMT   |   Update On 2023-02-03 10:17 GMT
  • தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7ஏ(2)-ன்படி பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும்.
  • கோவில்களின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதிவாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பார்கள்.

சென்னை:

இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7ஏ-ன் கீழ், திருப்பூர் மற்றும் பெரம்பலூர் வருவாய் மாவட்டங்களின் எல்லைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களைத் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை கொண்ட மாவட்டக் குழுக்கள் அமைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டக் குழுவின் தலைவராக க.சுப்பிரமணியமும், உறுப்பினர்களாக ப.கலைச்செல்வி, ராம. முத்துராமன் ப.ஜெகநாதன், க.சாமி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டக் குழுவின் தலைவராக ஆ. கலியபெருமாளும், உறுப்பினர்களாக மா.சண்முகம், டி.கே.ராமச்சந்திரன், சி.பாஸ்கர், சே.கோகிலா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் அந்தந்த வருவாய் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டப்பிரிவுகள் 49 (1), 46 (i), 46(ii)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள கோவில்களின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதிவாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பார்கள்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7ஏ(2)-ன்படி இக்குழுக்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News