உள்ளூர் செய்திகள்

ஆம்பூர் நகராட்சி கூட்டம் நடந்த காட்சி. 

ஆம்பூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்

Published On 2023-01-25 09:41 GMT   |   Update On 2023-01-25 09:41 GMT
  • நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
  • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்

ஆம்பூர்:

ஆம்பூர் நகராட்சியில் உள்ள நகர மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்த அவசர கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் ஏஜாஸ் அஹ்மத் தலைமை தாங்கினார்.

நகராட்சி துணைத் தலைவர் ஆறுமுகம், நகராட்சி ஆணையாளர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் வரும் ஓராண்டிற்கு தனியார் மூலம் ரூ.6.64 கோடி மதிப்பில் குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

வசந்த ராஜ் திமுக கவுன்சில் ஆம்பூர் ஏ-கஸ்பா சாலை பாதாள திட்டப் பணிகளால் மிகவும் சேதமடைந்து வாகனங்கள் சென்றுவர முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே உடனடியாக புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறியாளர். பணி மேற்கொள்ளப்படும் என்று பதில் அளித்தார்.ரமேஷ் திமுக ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து இடையூறாக அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆம்பூர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது இதனால் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதேபோல பல்வேறு கட்சியை சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டு பிரச்சினை குறித்து கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள்.நகராட்சி தலைவர் அனைத்தும் பரிசிலனை செய்வதாக உறுதி கூறினார்.

இந்த கூட்டத்திற்கு 36 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News