உள்ளூர் செய்திகள்

வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

வீடு வீடாக கொசு மருந்து அடிக்கும் பணி

Published On 2022-09-30 09:58 GMT   |   Update On 2022-09-30 09:58 GMT
  • 3 நாட்கள் நடைபெறும்
  • பொதுமக்களுக்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஜோலார்பேட்டை:

ேஜாலார்பேட்டை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மையப்பன் நகர் ஊராட்சி பகுதி முழுவதும் நேற்று முன்தினம் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்கும் பணி தொடங்கியது.

அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன் தலைமையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் நிர்மலா சஞ்சய் மற்றும் சுகாதார துறை சார்பில் சுகாதார ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் இணைந்து அப்பகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னால் தலைவர் வட்டம், வி.எம்.வட்டம், வரதராஜ் கவுண்டர் வட்டம், சில்கூர் உள்ளிட்ட அம்மையப்பன் நகர் ஊராட்சி பகுதி முழுவதும் உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது

இப்பணி தொடர்ந்து 3 நாட்களாக நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன் தெரிவித்தார்.

Tags:    

Similar News