உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

காய்கறி செடிகளுக்கு இயற்கை கரைசல் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு

Published On 2023-01-31 15:26 IST   |   Update On 2023-01-31 15:26:00 IST
  • கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் அடுத்த சோமநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இதில் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தோட்டக்கலை பயிர்களுக்கு இயற்கை முறையில் கரைசல் தயாரித்து அவற்றை காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தும் விதம் குறித்தும் பாதுகாப்பு மற்றும் மகசூல் குறித்தும் செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News