உள்ளூர் செய்திகள்

பூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் மூலமாக பயிர்களுக்கு தெளிக்கும் முறையை கலெக்டர் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

உரம் பூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் மூலம் பயிர்களுக்கு தெளிக்கும் முறை

Published On 2023-04-23 07:26 GMT   |   Update On 2023-04-23 07:26 GMT
  • கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • 3 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டுள்ள மாஞ்செடிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன். பார்வையிட்டார்

திருப்பத்தூர்:

கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி கிராமத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் சார்பில் தயார் செய்யப்பட்ட நானோ யூரியா உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் மூலமாக பயிர்களுக்கு தெளிக்கும் முறையை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து கந்திலி ஊராட்சி ஒன்றியம் செவ்வாத்தூர் ஊராட்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 22 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலத்தை விலை நிலமாக மாற்றப்பட்டு, வேளாண் பொறியியல் துறையின் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைகப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு சொட்டுநீர் பாசனம் அமைத்து 3 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டுள்ள மாஞ்செடிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன். பார்வையிட்டார்கள்.

இதில் சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குநர். சித்ராதேவி, வேளாண்மை இணை இயக்குநர் பாலா, துணை இயக்குநர் பச்சையப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருஇராமச்சந்திரன், உதவி இயக்குநர்கள் இராகினி, அப்துல்ரஹமான், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News