உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளி ஊராட்சி களரூர் கிராமத்து சாலை மற்றும் குடிநீர் பணிகளை நல்லதம்பி எம் எல் ஏ, தொடங்கி வைத்தார்.

களரூர் கிராமத்திற்கு ரூ.10, லட்சத்தில் சாலை, குடிநீர் வசதி

Published On 2022-08-08 09:35 GMT   |   Update On 2022-08-08 09:42 GMT
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
  • நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுக்கா மாடப்பள்ளி ஊராட்சி களரூர் கிராமத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு திருப்பத்தூர் நல்லதம்பி எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாடப்பள்ளி மெயின் ரோட்டில் இருந்து களரூர் வரை ரூ.10 லட்சத்தில் பேவர் பிளாக் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள பூஜை செய்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி களரூர் கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் பி. திருமலைவாசன் தலைமை வகித்தார்.

அனைவரையும் சர்க்கரை ஆலை இயக்குனர் வேங்கையன் வரவேற்றார். பாலாஜி ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சாலை மற்றும் குடிநீர் பணிகளை பூஜை போட்டு நல்லதம்பி எம்எல்ஏ தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் ரகு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வடிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்ராமச்சந்திரன், ‌ கண்ணன் தனபால் கோவிந்தராஜ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News