உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் நகராட்சி கமிஷனருக்கு மிரட்டல்

Published On 2022-06-16 14:47 IST   |   Update On 2022-06-16 14:47:00 IST
குமாரபாளையம் நகராட்சி கமிஷனருக்கு மிரட்டல் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது போலீசில் புகார் செய்தனர்.

குமாரபாளையம்:

குமாரபாளையம் நகராட்சி கமிஷனராக விஜயகுமார் உள்ளார். இவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

குமாரபாளையம் நகராட்சியின் 30-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணி நகராட்சி அலுவலகத்திற்குள் எனது அறையில் அத்துமீறி உள்ளே நுழைந்து கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு அனுமதி வழங்குமாறு தெரிவித்தார்.

அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததினால் தகாத வார்த்தைகளால் பேசியும், உன்னை என்ன செய்கிறேன் பார் என்றும் எனக்கு மிரட்டும் வகையில் பேசினார்.

எனவே கவுன்சிலர் பாலசுப்ரமணி மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அ.தி.மு.க. கவுன்சிலர் மீது நகராட்சி கமிசனர் புகார் அளித்த சம்பவம் குமாரபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News