உள்ளூர் செய்திகள்

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2023-10-30 15:02 IST   |   Update On 2023-10-30 15:02:00 IST
  • அதிகாரிகள், பெற்றோருக்கு அறிவுரைக்கூறி எச்சரித்து அனுப்பினர்
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனியார் பயிற்சி மையத்தில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக 1098 எண்ணிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தை நல அலுவலர் உத்தரவின் பேரில் வெம்பாக்கம் வட்டார ஊர்நல அலுவலர் லலிதா தென்கழனி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்று நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

மேலும் 17 வயதுடைய சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்றும், 18 வயது பூர்த்தியானதும் திருமணம் செய்து வையுங்கள் என்று சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரைக்கூறி எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து சிறுமியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து ஊர் நல அலுவலர் லலிதா, மணமகன் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் மீது மோரணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News