உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகே உள்ள அய்யங்குளத்தின் கரையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Published On 2023-08-16 14:54 IST   |   Update On 2023-08-16 14:54:00 IST
  • அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர்
  • ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் உள்ள இடங்களில் திதி கொடுத்தனர்

திருவண்ணாமலை :

ஆடி அமாவாசை என்பதால் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். போளூரில் உள்ள பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், காஞ்சி சங்கர வேத பாடசாலை ஆகிய இடங்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு பெரியமலை திருமணி சேறைவுடையார் சிவன் கோவில் வளாகம், பெரியகொழப்பலூர் திருக்குராஈஸ்வரர் கோவில் வளாகம், நெடுங்குணம் தீர்க்காஜல ஈஸ்வரர் கோவில் வளாகம், தேசூர் காசிவிஸ்வநாதர் கோவில் வளாகம், ரேணுகாம்பாள் கோவில் வளாகம் ஆகிய இடங்களில் சிவாச்சாரியார்களிடம் முன்னோர்கள் பெயரில் தர்ப்பணம் செய்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆரணி புத்திரகா மேட்டீஸ்வரர் கோவில் அருகாமையில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

இதில் திரளான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

அதேபோல் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் உள்ள இடங்களில் ஏராளமான மக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Tags:    

Similar News