கடைவீதிக்கு குழந்தையுடன் சென்ற பெண் மாயம்- கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் கணவன் புகார்
- பல்வேறு இடங்களில் தேடியும் இளம் பெண் சுக்கிளாரா மற்றும் குழந்தை பவியா கிடைக்கவில்லையாம்.
- பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்வேல்(வயது31). டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் ஆனது. சுக்கிளாரா(வயது26) என்ற மனைவியும், பவியா(வயது3) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுக்கிளாரா தனது குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு கடைவீதிக்கு சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் இளம்பெண் சுக்கிளாரா மற்றும் குழந்தை பவியா கிடைக்கவில்லையாம்.
இதனால் காணாமல் போன தனது மனைவி மற்றும் குழந்தையை கண்டுபிடித்து தருமாறு டிரைவர் தமிழ்வேல் நேற்று பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.